கேரளாவின் காசியா லிஸ் மெஜோ மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டம் வென்று சாதனை!
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 அழகிப் போட்டி ஜெய்ப்பூரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 19 வயதான காசியா லிஸ் மெஜோ புதிய அழகிப் பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
நடப்பு அழகி மணிகா விஸ்வகர்மா புதிய வெற்றியாளருக்கு மகுடம் சூட்டினார். இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த அனுஸ்ரீ சதாவ்லேகர் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.இந்த ஆண்டின் இறுதியில் புவேர்ட்டோ ரிக்கோவில் நடைபெறவுள்ள சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.
இவரின் இந்த வரலாற்றுச் சாதனைக்குத் திரைத்துறையினர் மற்றும் பொதுமக்களின் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கலந்துகொண்ட திறமையான போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி இவர் மகுடம் சூடியுள்ளார். இவரின் இந்த வரலாற்றுச் சாதனைக்குத் திரைத்துறையினர், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கேரளா மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ள காசியா லிஸ் மெஜோ, சர்வதேச அளவில் நடைபெறவுள்ள அடுத்த கட்டப் போட்டிகளுக்காகத் தயாராகி வருகிறார்.