தோனிக்கு பிரியாவிடை கொடுக்க கடைசி வாய்ப்பு கிடைத்திருக்கலாம்... முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பதிவு

 

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனியின் ஓய்வு முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தோனிக்கு நன்றி தெரிவித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை அணிக்கு ஐபிஎல் கோப்பைகளைத் தாண்டி பல சிறப்புகளை தோனி வழங்கியுள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். நல்ல விஷயங்கள் அனைத்தும் ஒருநாள் முடிவுக்கு வரத்தான் செய்யும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தின் அன்புக்குரிய தவப்புதல்வரான தோனிக்கு தகுதியான பிரியாவிடை அளிக்க தங்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்கள், மகத்தான வெற்றிகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளை வழங்கியதற்காக தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வழிகாட்டியாக தனது புதிய இன்னிங்சில் தோனி சிறப்பாகச் செயல்பட வாழ்த்துவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பதிவு தோனி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.