அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் செய்தி தொடர்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அரசியல் களம் பல்வேறு விவாதங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் ஊடக உத்திகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

திமுக தலைமயிலான இந்த கூட்டத்தில், கட்சியின் செய்தி தொடர்பாளர்களுக்குப் பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.  கழகத்தின் அடிப்படை கொள்கை சார்ந்த முன்னெடுப்புகளை மக்களிடம் இன்னும் வலுவாகக் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அரசின் மக்கள் நல திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் ஒவ்வொரு பொதுமக்களையும் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. ஊடக விவாதங்கள் மற்றும் பொதுவெளியில் எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களை எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல்வேறு விமர்சனங்களுக்கு, கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் மிகவும் துரிதமாகவும், அதே நேரத்தில் துல்லியமான தரவுகளுடனும் பதிலளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

கட்சியின் கொள்கைகளையும், சாதனைகளையும் பொதுமக்களிடம் தொய்வின்றி கொண்டு சேர்க்கும் வகையில் செய்தி தொடர்பாளர்கள் தங்களது பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.