முதல்வர்களில் மு.க.ஸ்டாலின் முதலிடம்.. விஜய்க்கு 4வது இடம்.. என்னாச்சு தெரியுமா?!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாகத் டெல்லி சென்றுள்ள விஜய், நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மாநில நலன் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடினார். புதிய முதலமைச்சர்கள் தங்களது முதல் டெல்லிப் பயணத்தின் போது பிரதமரிடம் சமர்ப்பிக்கும் கோரிக்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், தற்போதைய சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் ஒப்பீட்டு விவாதத்தை உருவாக்கியுள்ளது.
மாநில வளர்ச்சியை முன்னிறுத்தி முன்னாள் முதலமைச்சர்கள் தங்களது முதல் சந்திப்பில் பிரதமரிடம் வழங்கிய மனுக்களின் விவரங்கள் மற்றும் தற்போதைய தரவரிசைப் பட்டியலில் விஜய் நான்காம் இடத்தில் இருக்கிறார். கடந்த காலங்களில் தமிழக ஆட்சித் தலைவர்கள் தங்களது முதல் அரசுமுறை டெல்லிப் பயணத்தின் போது, மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் நிதித் தேவைகள் குறித்துப் விரிவான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:
முதலிடத்தில் மு.க. ஸ்டாலின்:
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், பிரதமரைச் சந்தித்த முதல் வாய்ப்பில் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட மிக அதிகபட்சமாக 63 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாமிடத்தில் ஜெ. ஜெயலலிதா:
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, தனது முதல் சந்திப்பின் போது மாநிலத்தின் மின்சாரப் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த 29 கோரிக்கைகளை முன்வைத்தார்.
மூன்றாமிடத்தில் எடப்பாடி கே. பழனிசாமி:
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, வறட்சி நிவாரணம் மற்றும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு தொடர்பாகப் பிரதமரிடம் 23 கோரிக்கைகளை வழங்கி மூன்றாம் இடத்தில் உள்ளார்.
நான்காம் இடத்தில் முதலமைச்சர் விஜய் :
நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் மிக அத்தியாவசியமான மற்றும் அவசரத் தீர்வு காண வேண்டிய 4 முக்கியக் கோரிக்கைகளை மட்டுமே பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளார். இதனால், அதிக கோரிக்கைகளை முன்வைத்த பட்டியலின் தரவரிசையில் அவர் 4-ஆவது இடத்தில் உள்ளார்.
மத்திய அரசின் சில குறிப்பிட்ட நிகழ்வுகளில் தேசியப் பாடல் முதலில் பாடப்படுவதால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, தமிழக அரசு நிகழ்ச்சிகளில் வழக்கம்போல் 'தமிழழ்த்தாய் வாழ்த்து' பாடலை முதலில் பாடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் உரிய தெளிவுரையை வழங்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப் பூமி பூஜை நடத்தத் திட்டமிட்டுள்ள கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு மத்திய நீர்சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர் ஆணையம் எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது.
இலங்கை கடற்படையினரால் அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட 58 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 266 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுக்கு மத்திய அரசு மூலம் ராஜதந்திர அழுத்தங்களை வழங்க வேண்டும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து அதிநவீன நடுத்தரப் போர் விமான வடிவமைப்பு மற்றும் வான்வழி அமைப்பு மையத்தினைத் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர்களைப் போல் நீண்ட பட்டியலாக வழங்காமல், தற்போதைய சூழலில் மாநிலத்திற்குத் தேவையான மிக முக்கியத் தூதரக மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மட்டும் சுருக்கமாகத் தேர்ந்தெடுத்து முதலமைச்சர் விஜய் விவாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.