மு.க.ஸ்டாலின் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஓய்வு - பெரியார் பிறந்தநாள், திமுக தொடக்க நாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டுகோள்!
திமுக தலைவரும் தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.
வைரஸ் தொற்று காய்ச்சல் காரணமாகத் தற்காலிகமாகத் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி இன்னும் 2 அல்லது 3 நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது உடல்நலம் குறித்து அன்போடு நலம் விசாரித்த அனைவருக்கும் அவர் தனது சமூக வலைதளப் பதிவு மூலம் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். நாளை செப்டம்பர் 17-ம்தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளும், திமுக தொடங்கப்பட்ட நாளும் வருவதையொட்டி, கழகத் தொண்டர்கள் அதனைப் பெருவெகுச்சியுடன் எழுச்சியுடன் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.