"எம்.எல்.ஏ-க்களுக்கு இலவச செல்போன், ரொக்கமில்லா மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்" - தாரகை கத்பர்ட் கோரிக்கை!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட், சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் 5 ஆண்டு முழுப் பணிக்காலத்திற்கும் பயனுள்ள வகையில் சியூஜி சிம்கார்டுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அரசு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

உறுப்பினர்கள் உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பட்சத்தில், அவர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி ரொக்கமில்லா சிகிச்சை கிடைப்பதற்குத் தமிழக அரசு உரிய ஆவன செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.