செல்போன் விலை 16% உயர்வு... பட்ஜெட் போன்களுக்கு கடும் பாதிப்பு!

 

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பட்ஜெட் வகை போன்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விலைகள் சராசரியாக 16 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. மெமரி சிப் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

ரூ.10,000-க்குக் கீழ் விற்பனை செய்யப்படும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களின் விலை சராசரியாக 32 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் இத்தகைய போன்களின் விநியோகம் சந்தையில் 65 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலான பிரிவின் விற்பனையும் 20 சதவீதம் வரை சரிந்துள்ளது.

இதற்கு மாறாக, ரூ.20,000-க்கு மேற்பட்ட விலைக் கொண்ட ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் வட்டியில்லா தவணை முறை வசதிகள் இதற்கு முக்கிய ஆதரவாக அமைந்துள்ளன.