undefined

இரவு 14 மாவட்டங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்பு! 

 

மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான “மோன்தா” தீவிரப் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா–யானம் கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே, காக்கிநாடாவிற்கு தெற்கே நரசாபூருக்கு அருகில், நேற்று நள்ளிரவில் கரையை கடந்தது. கரையை கடந்த பின்னர் புயலின் தீவிரம் குறைந்து, இன்று அதிகாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இது இன்று காலை 8.30 மணிக்கு ஆந்திரா பகுதிகளில் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேசமயம், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய மற்றொரு தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு–வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால், இன்று தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கோவை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!