சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புங்க... சென்னை உட்பட   19 மாவட்டங்களில் இரவு  வெளுத்து வாங்கப் போகும் மழை !   

 

தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று நிலவி வருகிறது. இதன் காரணமாகத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மாறுபாடுகள் காரணமாகத் திடீர் மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பிடப்பட்டுள்ள இந்த 19 மாவட்டங்களிலும் இன்று இரவு   இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும்  சமயங்களில் பலத்தக் காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.திடீர் மழையின் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கக் கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமாகப் பயணிப்பது அவசியமாகும். அதேபோல் இடி மின்னல் ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் திறந்தவெளிகளிலோ அல்லது மரங்களின் அடியிலோ நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.