தமிழகத்தில் இரவு 22 மாவட்டங்களில்  வெளுத்து வாங்கப் போகும் மழை! 

 

 

 

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் முக்கியப் பகுதிகள் மற்றும் 22 மாவட்டங்களில் இன்று இரவு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 22 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.