தங்கம் வாங்குவதைத் தவிருங்கள்... பிரதமர் மோடி வேண்டுகோள்!
அவசியமான சூழலைத் தவிர மற்ற நேரங்களில் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு இந்திய மக்களைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தனது இன்ஸ்டா வீடியோவில் வெளிநாட்டுப் பொழுதுபோக்கு பயணங்களையும், வெளிநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்வதையும் குறைத்துக்கொள்ள அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாகப் பதிவானதைத் தொடர்ந்து இந்த முக்கிய வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாப்பதற்குத் தங்கக் கொள்முதலைக் குறைப்பது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் இந்த அறிவுறுத்தல் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைக் காப்பதற்கும், உள்நாட்டுப் பணப்புழக்கத்தைச் சீராகப் பேணுவதற்கும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்கள் மூலம் அவர் விடுத்துள்ள இந்தக் கோரிக்கை பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.