undefined

  முகமது யூனுஸ் வங்கதேச  இடைக்கால அரசின் தலைவராக   பதவியேற்பு!

 


 
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில்  அசாதாரண அரசியல் நிலவரம் ஏற்பட்டிருந்தது.  இதனை சீராக்கும் வகையில்  இன்று வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.    1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக உருவானது. இந்த போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. 2018-ல் நடந்த மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது. 


இந்த இடஒதுக்கீடு விவகாரத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்கள் மிகப் பெரும் வன்முறையாக வெடித்ததில் பிரதமர் இல்லம் சூறையாடப்பட்டது. அங்கு வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனையடுத்து விரைவில் இடைக்கால அரசு அமையும் என வங்கதேச ராணுவ தளபதி தெரிவித்தார். இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொள்கிறது.

 இடைக்கால அரசில் மாணவர் அமைப்பினர், பெண்கள், இந்துக்கள் கொண்ட ஆலோசனைக் குழு பதவி ஏற்றது. வங்கதேச வங்கியின் முன்னாள் கவர்னர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் பதவி ஏற்றனர். சுதந்திர போராட்ட வீரர் பரூக்-இ-ஆஸாம், மனித உரிமை ஆர்வலர் ரஹ்மான் ஆகியோரும் பதவி ஏற்றனர். முகமது யூனுஸ் தலைமையில் 17 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா