தீவிரமடையும் பருவ மழை... இன்று 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் பெய்து வரும் தீவிர பருவமழை காரணமாக, 17 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள் கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருச்சி, சென்னை, சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகியவையாகும்.
சென்னையில் மட்டும், அதிகமழை காரணமாக நாளை அக்.23ம் தேதி ஆரஞ்சு அலர்ட் வானிலை எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மழை நீர் தேங்கும் அபாயம் உள்ள பகுதிகளில் 900 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் standby-ல் இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு, நீர் தேங்கல்களுக்கான முறைகளை கண்காணித்து வருகின்றன.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. பெற்றோர் மற்றும் மாணவர்கள் வானிலை முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!