நெகிழ்ச்சி... வருங்கால மனைவிக்கு நிலம் வாங்கி பரிசு அளித்த கட்டிடப் பொறியாளர்!
Aug 30, 2026, 06:40 IST
நாமகிரியைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் தனது வருங்கால மனைவிக்குத் திருமணப் பரிசாக நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அசத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் அசோக் சரவணன் வயது 32 ஆவார். இவர் தனது வருங்கால மனைவி ராதிகாவுக்குத் திருமணப் பரிசாகச் சர்வதேச இணையதளம் வாயிலாக நிலவில் 1 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.
லண்டனில் உள்ள தனது சகோதரியின் உதவியுடன் நிலத்திற்கான அதிகாரப்பூர்வ பத்திரத்தைப் பெற்று மனைவியை அவர் நெகிழ வைத்துள்ளார். வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய இவருக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.