1 கோடிக்கும் அதிகமானோர்... மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசு அகவிலைப்படி 3% உயர்வு!

 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளிப் பரிசாக அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணமும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு 2026 ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பலன் அடைவார்கள்.

ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான நிலுவைத் தொகையும் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளதால், ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.