40 லட்சம் பயனர்கள்.. திருமணத்திற்கு மீறிய ‘ரகசிய’ டேட்டிங் ஆஃப்.. முதலிடத்தில் பெங்களூரு.. பெண்களின் பங்கேற்பு 148% அதிகரிப்பு - அதிர்ச்சியூட்டும் டிஜிட்டல் புரட்சி!

 

இந்தியாவில் திருமண உறவுகள் குறித்த பாரம்பரியக் பார்வைகள் மாறி வரும் நிலையில், திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கான டேட்டிங் செயலியான 'க்ளீடன்' பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது. இதில் வியப்பளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்தப் பட்டியலில் இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவின் ரகசிய டேட்டிங் கலாச்சாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் நகரங்களில், ஒட்டுமொத்தப் பயனர்களில் 18% பேருடன் பெங்களூரு முதலிடத்தை வகிக்கிறது. 17% பயனர்களுடன் ஹைதராபாத் இரண்டாம் இடத்தில் உள்ளது.  11% பயனர்களுடன் டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது. 9% பங்களிப்புடன் மும்பை நான்காம் இடத்தில் உள்ளது. 7% பயனர்களுடன் புனே அடுத்த இடத்தில் உள்ளது. பெரிய பெருநகரங்கள் மட்டுமின்றி லக்னோ, சண்டிகர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் இந்தப் போக்கு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தரவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தச் செயலியில் இணையும் பெண்களின் எண்ணிக்கை 148% அதிகரித்துள்ளது. மொத்தப் பயனர்களில் 35% பேர் பெண்கள் ஆவர். பெண்களின் இந்த அதிகரிப்பு, அவர்களின் தனிப்பட்ட தேர்வுகளில் நிலவும் தன்னம்பிக்கையையும் சுதந்திரத்தையும் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மதிய உணவு இடைவேளையான 12 மணி முதல் 3 மணி வரையிலும், நள்ளிரவு 10 மணி முதல் 12 மணி வரையிலும் அதிகப்படியான நபர்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

ஆண்கள் பொதுவாக 25 - 30 வயதுடைய பெண்களைத் தேடுகின்றனர். ஆனால், பெண்கள் 30 - 40 வயதுடைய, பொருளாதார ரீதியாகத் தகுதியுள்ள மருத்துவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். இந்தியாவில் திருமணம் என்பது புனிதமான ஒன்றாகக் கருதப்பட்டாலும், டிஜிட்டல் யுகத்தில் தனிப்பட்ட உறவுகளைத் தேடும் போக்கு ஒரு ‘அமைதியான புரட்சி’யாக உருவெடுத்து வருகிறது.