இரண்டு மகள்களையும் கொன்று விட்டு தாய் தற்கொலை!
குடும்ப பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளான இளம் தாய், தனது இரண்டு மகள்களையும் கொன்று விட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு மாவட்டம் பேட்டபுரா பகுதியைச் சேர்ந்தவர் சயது முசவீர். அவரின் மனைவி அபியா பானு (25). இவர்களுக்கு பாத்திமா (1½ வயது) மற்றும் பிறந்து 10 நாட்களே ஆன இன்னொரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் இருந்தன.
அபியா பானுவின் முதல் மகள் பாத்திமா பிறந்தது மாற்றுத்திறனுடன் என கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்துடன் இருந்த நிலையில், இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்தது. இதற்கிடையில் கணவன்–மனைவிக்கிடையே சிறிய சிறிய குடும்ப பிரச்சினைகள் ஏற்பட்டதாக தகவல்.
இந்நிலையில் நேற்று காலை கணவன் வேலைக்குச் சென்ற பிறகு, மன வேதனையில் ஆழ்ந்த அபியா பானு தனது இரு பச்சிளம் குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அதே கத்தியால் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, தாய் மற்றும் இரு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் தனது குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக்கொண்ட இந்த துயரச் சம்பவம் மைசூரு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டும் பெண் குழந்தைகள் என்பதால் துன்புறுத்தப்பட்டாரா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!