3 குழந்தைகளுடன்  80 அடி உயரக் கோட்டையிலிருந்து கீழே குதித்த   தாய்!  

 

 

 

மராட்டிய மாநிலம் தாராசிவ் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நல்துர்க் கோட்டைக்கு வந்த அஸ்வினி என்ற பெண் தனது மூன்று குழந்தைகளுடன் கோட்டையின் உச்சிக்குச் சென்றுள்ளார்.இவர் தேசிய மல்யுத்த வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சுமார் 105 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோட்டையின் 80 அடி உயரம் உள்ள உப்பிலி கொத்தளத்திற்குத் தன் பிள்ளைகளுடன் சென்ற அவர் திடீரென கீழே குதித்துள்ளார்.தாயுடன் குழந்தைகள் கீழே குதித்ததைக் கண்டு அதிர்ந்துபோன சுற்றுலா பயணிகளும் ஊழியர்களும் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கோட்டையின் 80 அடி உயரம் கொண்ட உப்பிலி கொத்தளத்திற்குத் தன் குழந்தைகளுடன் சென்ற அவர், எதிர்பாராதவிதமாக அவர்களை அழைத்துக்கொண்டு கீழே குதித்ததைக் கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவத்தில் அஸ்வினி மற்றும் அவரது மகன் அஜிங்கே ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் கிராந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் மற்றும் வீரா தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறாள்.