தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - எகிறும் எதிர்பார்ப்பு... புதிய அப்டேட்!
Aug 16, 2026, 08:30 IST
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பயனடையப் பெற்றோர்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், தாயின் PICME எண், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, முகவரிச் சான்று ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் மூலமாகவே நேரடியாகச் செயல்படுத்தப்படும். குழந்தை பிறந்த பிறகு, தேவையான ஆவணங்களை மருத்துவமனை நிர்வாகமே நேரடியாகச் சரிபார்க்கும். சரிபார்ப்புப் பணிகள் முடிந்தவுடன், குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் மருத்துவமனை நிர்வாகத்தால் நேரடியாக வழங்கப்படும்.