5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி... முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்குகிறது... !
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து தற்போது 123 அடியை நெருங்கியுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தீவிரமாகப் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் பாதுகாப்புக் கருதி நீர்வரத்து மற்றும் நீரின் அளவு ஆகியவை துறை சார்ந்த அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பெரியாறு அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவும் மழையின் தன்மைக்கு ஏற்பக் கணக்கிடப்பட்டு உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வரும் இந்தச் சீரான வானிலை காரணமாக அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு விவசாயப் பணிகளுக்கும் தேவையான நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.இந்த நீர்மட்ட உயர்வு தொடர்பான தகவல்களை அறிந்த தேனி, திண்டுக்கல் , மதுரை உட்பட 7 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணையின் நீர்வரத்து மற்றும் முழுமையான கொள்ளளவு குறித்த விவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.