மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் ஃஉத்தரவு!

 

மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு, ஆள்மாறாட்டம் செய்து மோசடியாகப் பாஸ்போர்ட் பெற்ற வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.55,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு சோட்டா ராஜன், தனது உண்மை அடையாளத்தை மறைத்து, போலி முகவரி மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆள்மாறாட்டம் மூலம் பாஸ்போர்ட் பெற்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ₹55,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மும்பை மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் கொலை, ஆட்கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூரக் குற்ற வழக்குகளில் ஏற்கனவே தண்டனை பெற்றுள்ள சோட்டா ராஜன், தற்போது டெல்லியில் உள்ள திகார் தீவிர பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.