அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது மாடியில் பயங்கர தீ விபத்து... அதிர்ச்சி வீடியோ!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் லால்பாக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (நவ.19) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சிவாடா கல்லியில் உள்ள பூனம் பார்க் குடியிருப்பின் 10-வது மாடியில் உள்ள வீட்டில் காலை சுமார் 10.16 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மும்பை தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதுடன், ஜன்னல் வழியாக தீப்பிழம்புகளும் காணப்பட்டன. தீயணைப்புப் பணிக்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு அவசரகால மீட்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த விபத்தில் இதுவரை யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்