பகீர்... காதல் திருமணத்துக்கு ஒத்துக்கல... தந்தையை குத்தி கொலை செய்த மகன்!
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்ற 62 வயது விவசாயி, தனது சொந்த நிலத்தில் சாகுபடி செய்து வந்தார். இவர் அப்பகுதியில் சிலம்பம் மற்றும் குஸ்தி மாஸ்டராகவும் இருந்துள்ளார். இவருக்கு ராஜாராம் என்ற மகனும், ஜான்சி ராணி, திவ்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்களுக்குத் திருமணம் முடிந்துவிட்ட நிலையில், மனைவி ஜெயசுந்தரி ஏற்கனவே இறந்துவிட்டதால் குணசேகரன் மகனுடன் வசித்து வந்தார்.
இவர் பத்திரக்கோட்டை - புலியூர் செல்லும் சாலையில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஒரு கூரை கொட்டகை அமைத்து, அங்கேயே சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு இரவு நேரக் காவலாளி வேலையையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், கீழ்மாம்பட்டில் வசிக்கும் இவரது பெரிய மருமகன் தவபாலன், குணசேகரனின் கைபேசிக்கு அழைத்துள்ளார். ஆனால், அவரது கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தவபாலனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக கடலூர் வண்டிக்குப்பத்தில் வசிக்கும் சிறிய மருமகன் தனிஷ்குமாரைத் தொடர்பு கொண்ட தவபாலன், மாமனாரை நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்பேரில் தனிஷ்குமார் தோட்டத்தில் உள்ள கொட்டகைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு குணசேகரன் மார்பில் கூர்மையான ஆயுதங்களால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த கொலைச் சம்பவம் குறித்துப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.