கொடூரத்தின் உச்சம்...  மனைவியை கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவன்!

 

தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் யாதவ நகரைச் சேர்ந்தவர் அனில், இவரது மனைவி ரஜிதா என்பவராவார். இந்தத் தம்பதிக்குத் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் முற்றியுள்ளது.

allowfullscreen

இதனால் ஆத்திரமடைந்த அனில் தனது மனைவியின் கை, கால்களைக் கயிற்றால் கட்டிவிட்டு வீட்டிலிருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்றுள்ளார். ரஜிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துத் தகவலறிந்த காகதியா பல்கலைக்கழகப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்தத் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ள அனிலை வலைவீசித் தேடி வரும் நிலையில், தாய் இறந்ததால் அக்குழந்தைகள் அனாதையாகி உள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.