அதிமுகவிற்குப் பேரதிர்ச்சி - இபிஎஸ்-க்கு கடிதம் எழுதிய ஒரு மணி நேரத்தில் தவெகவில் இணைந்தார் முருகுமாறன்!

 

அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான முருகுமாறன், கட்சியில் இருந்து விலகுவதாகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதிய சில மணி நேரங்களிலேயே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவிலிருந்து தான் முழுமையாக விலகுவதாகக்றி முருகுமாறன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பினார். கடிதம் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அவர் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்தவரான முருகுமாறன், கடந்த காலங்களில் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.-வாகப் பணியாற்றியவர். விவசாயப் பட்டமும், சட்டப் பட்டமும்  பெற்றுள்ள இவர், நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.