பிரபல இசையமைப்பாளர் கோழிக்கோடு அபுபக்கர் காலமானார் !
Updated: Sep 1, 2026, 13:16 IST
மேடைப் பாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் கோழிக்கோடு அபுபக்கர் (80) பக்கவாத பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
பாபுராஜ், தேவராஜன் மாஸ்டர் போன்றோருடன் தபேலா கலைஞராகப் பணியாற்றியுள்ள இவரது இசையில் கே.ஜே. யேசுதாஸ், சித்ரா உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் பலரும் பாடியுள்ளனர். இவரது உடல் இன்று (செப். 1) மதியம் 1:30 மணிக்கு கோழிக்கோட்டில் உள்ள மத்தோட்டம் ஜும்ஆ மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.