“என்னோட அப்பா இன்னைக்கு CM” - ஜேசன் சஞ்சய் பேச்சால் அதிர்ந்த அரங்கம் - முழு வீடியோ!

 
ஜேசன் சஞ்சய் விஜய்

'சிக்மா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய், தனது தந்தையும் முதலமைச்சருமான விஜய் குறித்துக் குறிப்பிட்ட சுவாரஸ்யமான பேச்சு அரங்கம் முழுவதும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'சிக்மா' படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேடையில் உரையாற்றிய ஜேசன் சஞ்சய், படக்குழுவினருக்கும் தனது குடும்பத்தினருக்கும் தனித்தனியாக நன்றிகளைத் தெரிவித்தார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/uics5XMmkgk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/uics5XMmkgk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

அப்போது தனது தாயாருக்கு நன்றி தெரிவித்த அவர், “என்னோட அம்மாவுக்கு நன்றி.. என்னோட அப்பா இன்னைக்கு CM.. அவருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுக் கூறினார். இதைக் கேட்டதும் ஒட்டுமொத்த அரங்கமும் அதிரும் வகையில் ரசிகர்கள் ஆர்ப்பரித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தந்தை விஜய் தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் நிலையில், மேடையில் அவரைப் பெருமையுடன் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.