“நா*** தலைவர்கள் முதலமைச்சர்களாக இருக்கின்றனர்... மேடையில் முதல்வர் விஜய்யை தரக்குறைவாக விமர்சித்த ஆ.ராசா - அதிர்ச்சி வீடியோ!

 

தமிழகச் சட்டமன்றத்தில் தவெக மற்றும் திமுக இடையே வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பயன்படுத்திய கடுமையான வார்த்தை தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

"ஸ்டாலினின் தூண்டுதலின் பேரில் தான் ஆ.ராசா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பேசுகின்றனர்" என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று மதியம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆ.ராசாவின் இந்த சர்ச்சை பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/Y-kDF3y5Dtg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Y-kDF3y5Dtg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

திருவாரூரில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, தற்போதைய சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்:

"பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் ராஜாஜியும் அமர்ந்து கண்ணியமான விவாதங்களை நடத்திய பெருமைமிக்க வரலாறு கொண்டது நம் தமிழகச் சட்டமன்றம். ஆனால், அத்தகைய பாரம்பரியம் மிக்கத் தமிழகச் சட்டமன்றத்தில் தற்போது நாதாரி தலைவர்கள் முதலமைச்சர்களாக அமர்ந்திருக்கிறார்கள்." முதலமைச்சரை இத்தகைய தரக்குறைவான வார்த்தையால் அவர் விமர்சித்துள்ளது தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இன்று திருவாரூர் மேடையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "கூட்டணியே தேவையில்லை என்ற கருத்தையும் பரிசீலிப்போம்" எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கு ஆ.ராசா தனது பேச்சில் முழு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார்.  "கடந்த ஒரு சட்டமன்றத் தேர்தல் தோல்வியை மட்டுமே வைத்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் என்ற ஆளுமையையோ அல்லது திமுகவின் பேரியக்க வரலாற்றையோ யாராலும் அவ்வளவு எளிதாக எடைபோட்டு விட முடியாது."

"வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக எந்தவொரு கூட்டணியிலும் இல்லை என்பதைத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்பொழுதே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். தமிழ்நாட்டையும் அதன் திராவிடக் கொள்கைகளையும் காக்க இதைத் தவிர வேறு வழியில்லை" என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.