தவறாம கடைபிடிங்க... இன்று கருட பஞ்சமி... தீராத வியாதிகள் நீங்க  விரதமுறை, வழிபாடு , பலன்கள்! 

 

இந்துக்களின் முக்கிய ஆன்மீக விழாக்களில் ஒன்றான நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி விரத நாட்கள் குடும்ப நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக அனுசரிக்கப்படுகின்றன. இந்தச் சிறப்புமிக்க நாள்களில் நாக தேவதைகளையும் பெருமாளின் வாகனமான கருட பகவானையும் முறைப்படி வழிபடுவது வழக்கம். ஜாதகத்தில் உள்ள சர்ப்ப தோஷங்கள் நீங்குவதற்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும் இந்த வழிபாடு பெரிதும் உதவுகிறது.

நாக சதுர்த்தி தினத்தன்று பெண்கள் விரதமிருந்து நாக தெய்வங்களுக்குப் பால் ஊற்றி மலர்கள் தூப தீபங்கள் காட்டி வழிபடுகின்றனர். புத்து வழிபாடுகள் மற்றும் சிறப்புப் பூஜைகள் செய்து தங்களது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக மனதாரப் பிரார்த்தனை செய்கின்றனர். தொடர்ந்து வரும் கருட பஞ்சமி நாளில் மகாவிஷ்ணுவையும் கருட பகவானையும் வைணவ முறைப்படி பூஜித்து விரதத்தை நிறைவு செய்வர்.

இந்த விசேஷ நாள்களில் செய்யக் கூடிய வழிபாடுகள் மூலம் தீராத வியாதிகள் நீங்குவதாகவும் ஆன்மீக நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. வீடுகளில் எளிய முறையில் பூஜை செய்து உரிய நைவேத்யங்களைப் படைப்பதன் மூலம் இறைவனின் அருள் முழுமையாகக் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கச் செய்யும் இந்த வழிபாட்டு முறைகள் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

 1. வீட்டு பூஜை அறையில் நாக சிலை அல்லது நாகத்துடன் கூடிய அம்மன் படம் வைத்து வழிபாடு செய்யலாம்.
2. மஞ்சள், குங்குமம், சந்தனம், அகில் தூபம், பூக்கள் படைத்து பால் அபிஷேகம் செய்ய வேண்டும். அரளி, செம்பருத்தி, மல்லிகை பூக்களை நாக தேவதைக்கு படைத்து வழிபடுவது சிறப்பு.
3. பால், மஞ்சள் கலந்த நீர், சந்தனம் வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
4. நாகருக்கு பால், மஞ்சள், சர்க்கரை பொங்கல், நெய் கலந்த எள் சாதம் நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
5. நாக ஸ்தோத்திரம், நாக கவசம் மந்திரம் அல்லது "ஓம் நமோ நாகாய" என்ற மந்திரங்களை ஜபித்து வழிபட வேண்டும்.
6. மாலை நேரத்தில் தீபம் ஏற்றி, நாகருக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.