அழுகிய நிலையில் நிர்வாணமாக இளம்பெண் சடலம் மீட்பு... கோவையில் பரபரப்பு! 

 

தொழில் நகரமான கோவையின் முக்கியப் பகுதியான மேற்கு புறவழிச்சாலை அருகே உள்ள ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில், நேற்று மாலை நேரத்தில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கிடப்பதாக   போலீசாருக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கே சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணின் உடல் முற்றிலும் ஆடைகளின்றி நிர்வாணமான நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண்ணின் சடலமானது பல நாட்கள் ஆனதால் அசாத்தியமான முறையில் அழுகி, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலையில் காணப்பட்டது.

யாரோ மர்ம நபர்கள் அந்த இளம்பெண்ணை வேறு எங்கோ வைத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தைச் சிதைத்துக் காட்டில் வீசிச் சென்றுள்ளனர். கொலையாளிகள் திட்டமிட்டே போலீசாரின் தடையியல் சோதனைகளைத் திசைதிருப்ப இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தடையயியல் நிபுணர்கள் அங்கிருந்த சில முக்கிய ஆவணங்கள் மற்றும் தடயங்களைச் சேகரித்த பின்னர், அந்தப் பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கரக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிசார், உயிரிழந்த அந்த 25 வயது இளம்பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இதற்காக அக்கம் பக்கத்து மாவட்டங்களில் சமீபகாலமாக  காணாமல் போன இளம் பெண்களின் விபரங்கள் மற்றும் காவல் நிலையப் புகார்களைப் போலீசார்  முழுமையாகச் சரிபார்த்து வருகின்றனர். கோவையின் காட்டுப் பகுதியில் அரங்கேறியுள்ள இந்த கொடூரக் கொலை விபரம், அந்தப் பகுதி ஏழை எளிய நுகர்வோர் பொதுமக்கள் மத்தியில்   மிகப்பெரிய அச்சுறுத்தலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.