இந்தியா முழுவதும் அஞ்சலகங்களில்  தேசியக் கொடிகள் விற்பனை...  ! 

 

இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பெருமையுடன் தேசியக் கொடியை ஏற்றிடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் முக்கியப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் உள்ள அஞ்சலகங்கள் மூலம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி குறைந்த விலையில் தேசியக் கொடியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவின்படி நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தலைமை மற்றும் கிளை அஞ்சலகங்களிலும் கொடிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அஞ்சலகங்களுக்கு நேரில் வரும் பொதுமக்களுக்கு உடனுக்குடன் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்படுவதற்கான கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றிட இந்த ஏற்பாடு மிகவும் உதவியாக இருக்கும்.

சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியைப் பறக்கவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அஞ்சலக ஊழியர்கள் இதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதுடன் பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். நாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்தும் இந்தத் தேசிய விழாவில் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொள்ள வேண்டும்.