சுக்கிரன் உருவாக்கும் நவபஞ்ச ராஜயோகம்... இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்!
அழகு, செல்வம், காதல் மற்றும் செழிப்பின் அதிபராகக் கருதப்படும் சுக்கிரன் இன்று கன்னி ராசியில் நுழையவுள்ளார். சுக்கிரன் கன்னி ராசியில் பயணிக்கும் காலத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதியன்று நவபஞ்ச ராஜயோகம் உருவாகவுள்ளது. இது 84 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழவுள்ள அதிசய கிரகச் சேர்க்கையாகும். இந்த யோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், வேலை வாய்ப்பு, எதிர்பாராத நிதி ஆதாயங்கள் மற்றும் செல்வம் ஆகியவற்றை அளிக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ரிஷபம்
நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். பல வழிகளில் பணம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். காதல் வாழ்க்கையில் இனிமை நிலவும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெற வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். கலை, இசை, அழகு துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். நிதி நிலைமை மேம்படும். நீண்டகால தடைகள் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். நண்பர்களுடன் நல்ல தருணங்கள் உருவாகும்.
மகரம்
நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். பணியிடத்தில் முன்னேற்ற வாய்ப்பு கிடைக்கும். கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!