நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன திரிஷா! கடற்கரை புகைப்படத்துடன் நெகிழ்ச்சி பதிவு

 

 

நடிகை நயன்தாராவின் 42-வது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடற்கரையில் இருவரும் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் அந்தப் புகைப்படத்துடன், “எதிர்காலத்தில் இன்னும் பல சூரிய அஸ்தமனங்களை இணைந்து ரசிக்க வாழ்த்துகள்” என அன்புடன் குறிப்பிட்டுள்ளார்.

திரிஷாவின் இந்தப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருவருக்கும் இடையிலான நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தப் புகைப்படத்தையும் வாழ்த்துச் செய்தியையும் ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.