BREAKING... நீட் PG 2026  ரிசல்ட் வெளியீடு ....   எப்படி சரிபார்ப்பது? 

 

 

மருத்துவ மேற்படிப்புகளுக்கான NEET-PG 2026 தேர்வு முடிவுகளை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) இன்று (செப்.24) வெளியிட்டுள்ளது. இதனை NBEMS-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான natboard.edu.in-ல் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

NEET-PG 2026 தேர்வு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை எழுதிய மருத்துவ மாணவர்கள் தற்போது தங்களின் தேர்வு முடிவு மற்றும் அகில இந்திய தரவரிசை (AIR) உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.

முடிவை பார்ப்பதற்கு முதலில் NBEMS அதிகாரப்பூர்வ இணையதளமான natboard.edu.in-க்கு செல்ல வேண்டும். அங்கு NEET-PG 2026 தேர்வுக்கான Results பகுதியை தேர்வு செய்து, கேட்கப்படும் விண்ணப்பம் தொடர்பான விவரங்களை உள்ளீடு செய்து முடிவை பார்க்கலாம்.

NEET-PG 2026 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், தகுதி பெற்ற மாணவர்களுக்கான அடுத்தகட்ட சேர்க்கை மற்றும் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும். கலந்தாய்வு அட்டவணை மற்றும் பதிவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக மாணவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளங்களை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

மேலும், NEET-PG 2026-க்கான விடைக்குறிப்பு (Answer Key) அக்டோபர் 1 அல்லது அதற்குப் பிறகு வெளியிடப்படும் என NBEMS தெரிவித்துள்ளது. அதில் கேள்வி எண், சரியான விடை, மாணவர் அளித்த பதில் மற்றும் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பதாரர்கள் தங்களது தனிப்பட்ட Login மூலம் பார்க்க முடியும்.

எனவே NEET-PG 2026 தேர்வு எழுதிய மாணவர்கள், சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை நம்பாமல் NBEMS அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே தங்களது முடிவை சரிபார்ப்பது பாதுகாப்பானது.