கவுன்சிலிங்...  கவனமா பதிவு பண்ணுங்க... மருத்துவ மாணவர்களுக்கு  முக்கிய அறிவுறுத்தல்!

 

தமிழகத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் எனச் சேர்க்கை குழு எச்சரித்துள்ளது. சிறிய தவறுகள் கூட மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளதால் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் செயல்முறைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது சந்தேகங்கள் ஏற்பட்டால் மாணவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொண்டு தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்த்துச் சீரான முறையில் விண்ணப்பப் பதிவை நிறைவு செய்ய முடியும்.மாணவர்கள் தாங்கள் அளிக்கும் அனைத்துத் தகவல்களும் ஆவணங்களும் சரியாக உள்ளதா என்பதைச் சமர்ப்பிக்கும் முன்பு பலமுறை சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். கலந்தாய்வு தொடர்பான கூடுதல் விபரங்களைச் சேர்க்கை குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.