பதவியேற்பு விழா ரத்து... நேரு ஸ்டேடியம் முன்பு தவெக தொண்டர்கள் கதறல்!

 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான விழா ஏற்பாடுகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென அந்தப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் பலம் தவெக-விடம் இல்லாததால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பதவியேற்பு விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவலைக் கேட்டதும் நேரு உள்விளையாட்டு அரங்கின் முன்பு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தங்கள் தலைவரை முதலமைச்சராகப் பார்க்கும் ஆவலுடன் காத்திருந்த அவர்கள், பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டதை அறிந்து நேரு ஸ்டேடியம் வாசலிலேயே அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மாற்றம் வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு, பெரும்பான்மை இல்லாதது மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. காவல்துறையினர் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ள போதிலும், தொண்டர்கள் தங்களது ஏமாற்றத்தையும் மன வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். "நல்லதே நடக்கும்" என வெங்கட் பிரபு போன்ற பிரபலங்கள் ஆறுதல் கூறி வரும் வேளையில், தவெக தரப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர்.