ஓணம் பண்டிகை ... கேரளாவில் நேந்திரம் வாழைப் பழம் விலை வரலாறு காணாத உயர்வு!

 

 

கேரளாவில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களின் உற்சாகம் களைகட்டியுள்ள நிலையில், பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு முக்கியத் தேவையாக உள்ள நேந்திரம் வகை வாழையின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

  கேரளா மற்றும் தமிழகச் சந்தைகளில் கடந்த வாரம் வரை கிலோ ரூ.45 என்ற அளவில் விற்பனையாகி வந்த நேந்திரம் வகை வாழைக்காய் மற்றும் பழம், தற்போது திடீர் தேவை அதிகரிப்பு மற்றும் வரத்துக் குறைவு காரணமாகக் கிலோ ரூ.75 முதல் ரூ.80 வரை பாய்ந்து விற்பனையாகிறது.

மழை காரணமாக ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் மற்றும் உற்பத்திச் சரிவு இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பண்டிகை காலம் முடியும் வரை இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.