நேபாளப் பேரிடர்: இந்தியா 8-வது முறையாக 35 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!

 

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 5,000க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். இக்கட்டான இந்த சூழலில் நேபாளத்திற்குத் தொடர் உதவிகளை வழங்கி வரும் இந்தியா, தற்போது 8-வது முறையாக நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கான பிரத்யேகக் கருவிகள், தடய அறிவியல் துறைக்கான பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுக்களுக்கான அவசரச் சாதனங்கள் உள்ளிட்ட சுமார் 35 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக இந்திய விமானப் படையின் 8-வது சிறப்பு விமானம் நிவாரணப் பொருட்களுடன் நேபாளத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. ஏற்கெனவே பல்வேறு கட்டங்களாக 7 முறை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.