நேபாள வெள்ளம்: 10 நாட்களுக்குப் பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு!

 

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவித்தவர்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், சுரங்கத்திற்குள் பத்து நாட்களாகச் சிக்கியிருந்த இருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தின் திரிஷூலி பகுதியில் உள்ள சுரங்கத்தில் வெள்ளத்தின் காரணமாகச் சிக்கியிருந்த இருவரை மீட்புக் படையினர் பத்துப் நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக உயிருடன் மீட்டுள்ளனர். நீண்ட நாட்களாக எவ்விதத் தொடர்பும் இன்றிச் சுரங்கத்திற்குள் மாட்டிக்கொண்டிருந்த அவர்கள் மீட்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

சுரங்கத்திற்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால், அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளில் மீட்புக் படையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.