நேபாளப் பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,252 ஆக உயர்வு - தொடரும் மீட்புப் பணிகள்!
நேபாளத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட கோரப் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,252 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள மீண்டுள்ள எண்ணிக்கையில் இதுவரை 95 உடல்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கின் காரணமாகப் படுகாயமடைந்த 5,135 பேருக்கு நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அல்லது சிக்கிய 5,000-க்கும் மேற்பட்டோரின் இருப்பிடம் மற்றும் நிலை என்னவென்று இன்னும் தெரியவராத சூழல் நீடிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.