நேபாளப் பெருவெள்ளம்.. மாயமான 100 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு - தொடரும் மீட்புப் பணிகள்!

 

நேபாளத்தில் ஏற்பட்ட கோரப் பெருவெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளில் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் மாயமானவர்களில் 100 இந்தியர்கள் மற்றும் 25 சீனத் தொழிலாளர்கள் உட்பட பலரும் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த யாத்ரீகர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர். விபத்தில் சிக்கித் தவிக்கும் எஞ்சியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.