நேபாள வெள்ளப்பெருக்கு... சிக்கியிருக்கும் தமிழர்களுக்காக உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு!
நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும், அவர்களின் தகவல்களைப் பெறவும் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நேபாளத்திற்குச் சுற்றுலா சென்ற 57 பேரில், 37 தமிழர்கள் காட்டாற்று வெள்ளம் காரணமாகக் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவவும் அயலகத் தமிழர் நலத்துறை தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.
கட்டணமில்லாத் தொலைபேசி எண் (Toll-Free): 1800 309 3793. வெளிநாடு மற்றும் பிற தொடர்புகளுக்கு: 08069009901, 08069009900
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் மேற்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.