நவம்பர் 22-ல் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா!
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வருகிற நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் புதிய அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து பாலேந்திர ஷா பிரதமராக பதவியேற்றார். அவர் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ இருதரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இந்தியாவுக்கு வருகை தரும் பாலேந்திர ஷாவுடன் 34 பேர் கொண்ட குழுவும் வர உள்ளது. டெல்லி வரும் அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
குடியரசுத் தலைவர் முர்முவுடன் சந்திப்பு
இந்தப் பயணத்தின்போது இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா சந்திக்க உள்ளார்.இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.