நேபாள பெருவெள்ளத்தில் குழந்தைகளை போராடி காப்பாற்றிய தாய்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!  

 

 

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் பல பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரைப் பறிக்கும் வேகத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், தாய் ஒருவர் தனது குழந்தைகளைக் காப்பாற்றப் போராடிய காட்சிகள் காண்போர் நெஞ்சை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன.

வெள்ளத்தின் ஆபத்தை எளியும் பொருட்படுத்தாமல் தாய் தன் குழந்தைகளைப் பத்திரமாக மீட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் தாயின் பாசத்தையும் வெளிக்காட்டியுள்ளது.

இதற்கிடையே, நேபாளத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.