நேபாள பெருவெள்ளம்... பலி எண்ணிக்கை 987 ஆக அதிகரிப்பு... 4,000க்கும் மேற்பட்டோர் மாயம்!
Sep 1, 2026, 13:37 IST
நேபாளத்தில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 987 ஆக அதிகரித்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் தகவலின்படி, மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கித் தப்பியவர்களைத் தேடும் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், இன்னும் சுமார் 4,000-க்கும் அதிகமானோர் என்ன ஆனDது என்று தெரியாமல் காணாமல் போயுள்ளனர். இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முப்படை வீரர்களும் மீட்புக்குழுவினரும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.