'நெட்' தேர்வு முடிவுகள் வெளியீடு... 50,145 பேர் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி !

 

 

பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. சார்பில் நடத்தப்பட்ட 'நெட்' (NET) தகுதித் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறவும் இந்தத் தேர்வில் தகுதி பெறுவது அவசியமானதாகும்.

நடப்பாண்டுக்கான யு.ஜி.சி. நெட் தேர்வை நாடு முழுவதும் 6 லட்சத்து 7,151 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இத்தேர்வு முடிவுகளில் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு 4,241 பேரும், உதவிப் பேராசிரியர் பணி மற்றும் பி.எச்.டி. சேர்க்கைக்கு 45,904 பேரும் என மொத்தம் 50,145 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதனிடையே, வினாத்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக முன்பு ரத்து செய்யப்பட்ட ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடப்பிரிவுகளுக்கான மறுதேர்வு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.