முடிவுக்கு வந்தது நெதன்யாகு ஆட்சி... இஸ்ரேலில் புதிய அரசு அமைக்க காடி ஐசன்கோட்டுக்கு வாய்ப்பு!

 

இஸ்ரேல் அரசியலில் முக்கியத் திருப்பமாக, புதிய அரசை அமைப்பதற்கான பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டிடம் ஒப்படைக்க அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் முடிவு செய்துள்ளார். இதனால் நீண்டகாலமாகப் பிரதமராகப் பதவி வகித்து வரும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அரசியல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 120 இடங்களில் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை. ஆனால், எந்தக் கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. நெதன்யாகு தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களையும் பெற்றன. அரபு கட்சிகள் இணைந்து 19 இடங்களைக் கைப்பற்றின.

இதையடுத்து அதிபர் நடத்திய ஆலோசனையில், 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐசன்கோட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். நெதன்யாகுவுக்கு 46 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், புதிய அரசு அமைக்க ஐசன்கோட்டுக்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் மேலும் 14 நாட்கள் நீட்டிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது. இருப்பினும், புதிய கூட்டணி அமைந்து அரசு பொறுப்பேற்கும் வரை நெதன்யாகுவே காபந்து பிரதமராகத் தொடர்வார்.