undefined

 நடிகர் தனுஷுக்கு எதிரான நெட்ஃபிளிக்ஸ் மனு தள்ளுபடி!

 


 தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகைகளில் ஒருவர் நயன் தாரா. அவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இரட்டை மகன்களுக்கு தாயாகியுள்ளார். சமீபத்தில் நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி குறித்த  வீடியோ பதிவுகளை, மும்பையை சேர்ந்த 'நெட்பிலிக்ஸ்' நிறுவனம் வெளியிட்டது.


இதில், நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதற்காக  ரூ10 கோடி  இழப்பீடு கேட்டு, நயன்தாராவுக்கு, நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு நயன்தாரா  தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார்.
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், மும்பையை சேர்ந்த, நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, தனுஷ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு   தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் 'படத்தில் நயன்தாராவின் நடிப்பு, குரல், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது. தற்போது, நெட்பிலிக்ஸ் நிறுவனம், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ காட்சிகள் உடன், நயன்தாரா திருமண வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. இதனால், எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இழப்பீடாக, 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.   நெட்பிலிக்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் இன்று ஜனவரி 28ம் தேதி செவ்வாய்க்கிழமை இந்த மனுவை  சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. 'சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது என்பதால் வழக்கை நிராகரிக்க கோரி நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை ஏற்க ஐகோர்ட் மறுத்து விட்டது. இந்த  உரிமையியல் வழக்கை பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்தி வைக்க  ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!