undefined

 மலேசியாவில் புதிய கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் பரவல்... ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்பு !

 
 

மலேசியாவில் புதிய வகை கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் கண்டறியப்பட்ட எக்ஸ்.எப்.ஜி. என்ற புதிய கொரோனா வகை தற்போது மலேசியாவில் பரவி வருவதால், அங்கு பலருக்கு இன்புளூயன்சா மற்றும் மர்ம காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்குள் பள்ளிகளில் காய்ச்சல் பரவல் 14 இடங்களில் இருந்து 97 இடங்களுக்கு உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக பல பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதுவரை நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் 5 முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

சுகாதார அதிகாரிகள் மக்கள் கூட்டம் தவிர்க்கவும், முககவசம் அணியவும் கேட்டுக்கொண்டுள்ளனர். வருகிற நவம்பரில் சுமார் 4 லட்சம் மாணவர்கள் இறுதி தேர்வை எழுதவுள்ள நிலையில் இந்த திடீர் தொற்று பரவல் அதிகரிப்பது கவலைக்கிடமானதாகும். இதனை உலக சுகாதார அமைப்பு கண்காணிப்பில் வைக்க வேண்டிய கொரோனா வகையாக வகைப்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?