புதுக்கோட்டை நகரில் புதிய ரயில்வே மேம்பாலங்கள் - சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி!
Aug 27, 2026, 11:05 IST
புதுக்கோட்டை நகரில் நிலவிவரும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், ரயில்வே கேட்டுகளில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் எனப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை நகரில் உள்ள 3 ரயில்வே கேட்டுகளிலும் மேம்பாலங்கள் இல்லாத காரணத்தினால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சந்திக்கும் போக்குவரத்து நெரிசல் குறித்த சிக்கலை முன்னாள் அமைச்சர் ரகுபதி பேரவையில் எழுப்பினார்.
இப்பிரச்சினை அரசின் தீவிர கவனத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தேவையான ரயில்வே மேம்பாலங்களை அமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.